Friday, February 24, 2017

Gate syllabus--follow the link

https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=3&cad=rja&uact=8&ved=0ahUKEwijhevV16jSAhUBQpQKHadEB1UQFggqMAI&url=http%3A%2F%2Fgate.iitr.ernet.in%2Fwp-content%2Fuploads%2F2016%2F07%2FSyllabi_GATE2017.pdf&usg=AFQjCNE6EzI8NOPfDcvxuGnbrANKkEnecw&sig2=fX8LxqHBEQ6FW94r0Tsjbg

Wednesday, January 16, 2013

Dances


Classical Dances of India
·         Kuchipudi (Andhra Pradesh): Kuchipudi derives its name from the name of a village (Kuchelapuram) of its origin. It closely Resembles Bharatnatyam. However, its movements are much faster and style is free.
·         Mohiniattam (Andhra Pradesh): The word ‘mohini’ literally means a maiden who exerts desire or steals the heart of the onlooker. In format, this is similar to odissi and costumes sober and attractive. It is essentially a solo dance.
·         Bharatnatyam (Tamil Nadu): The earliest exponents of Bharatnatyam were the devadasis (temple dancers) in South India. The technique of Bharatnatyam consists of 64 Principles of coordinated hand, foot, face and body movements which are performed to the accompaniment of dance syllabus, popularly known as bolls.
·         Kathak (North India): The word Kathak is derived from Katha which means story. The Kathak dance goes through a regular format mostly concentrating on rhythm, variously called tether, palates, thorns, amid and parans.
·         Kathakali (Kerala): Kathakali combines music, poetry, mime and drama. This dance-drama is usually performed in the open and usually lasts the whole night. The themes are taken from the Ramayan, the Mahabharata and Hindu mythology.
·         Nat-Natin (Bihar): It is one of the important dances of Bihar. It is performed by both Men and Women.
·         Nati (Himachal Pradesh): This dance depicts all the activities involved in sowing the crop and reaping it. Important among the dances of Nati is ‘Losar Shona Chuksom’ which takes its name from Lasai, or the New Year.
·         Rauf (Jammu & Kashmir): It is the most popular dance in the Kashmir Valley and is restricted only to the women folk.
·         Hattari (Karnataka): The Hattari dance is done during harvesting season among the Kodvas of coorg in Mysore.
·         Yakshagana (Karnataka): It is one of the popular folk dance-drama as it contains a good number of classical and literary elements besides those of many folk and tribal ones.
·         Bhangra (Punjab): Bhangra refers to several types of Punjab style dance. Pujnab dancing in general, especially when done to popular Bhangra music, is often casually called “Bhangra”.
·         Garhwali (Uttarakhandi): The people of Garhwal region of Uttarakhand are fond of dancing, as testified by the several distinct dance forms. The Garhwali dance forms are: Langvir Nritya, Barada Nati, Shotiya and Pandva Nritya etc.
·         Odissi (Odisha): It is considered to be the oldest form of classical dance taking back to pre-Christan era Odissi is built on the principle that the human body is meant to be employed in deflection.
·         Manipuri (Manipur): Manipur is purely religious dance which is used to invoke divine blessing. Manipur involves a movement of head, hands and feet, in complete harmony. Another feature of this dance is that the men and women dance together.
·         Bihu (Assam): Bihu dance is a folk dance from the Indian state of Asom (Assam) related to the festival of Bihu. This joyous dance is performed by both young men and women and is characterized by brisk dance steps, and rapid hand movement. Dancers wear traditionally colourful Assamese clothing.
·         Garba (Gujarat): Garba is an Indian form of dance that originated in the Gujarat region. Many traditional garbas are performed around a central lit lamp or picture/statues of different avatars of Goddess Shakti. The circular and spiral figures of Garba have similarities to other spiritual dances, such as those of Sufi culture.

இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்

பொருளடக்கம்

முதலாம் ஐந்தாண்டுத் திட்டம்:(1951-1956)

இந்திய அரசு ,தனது முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் , உணவு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.விவசாயம் மற்றும் சமுதாய மேம்பாடு, பாசனம் மற்றும் மின்னுற்பத்தி, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறை, சமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதே முதல் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்த்தது.

இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1956-1961)

கிராமப் புற இந்தியாவை சீரமைத்தல் , தொழல் துறை வளர்ச்சிக்கான அடிக்கல்லை நாட்டுதல், பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்காக அதிக பட்ச வாய்ப்புகளை உருவாக்குதல் மற்று நாட்டின் அனைத்துப் பகுதிகளும் ஒரே சீராக வளர்ச்சி அடைவதை உறுதிசெய்தல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்களாக இருந்தன.

மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம்(1961-1966)

முதல் மற்றும் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டங்களின் நீட்சியாக இத்திட்டம் அமைந்தது.மேலும் நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தை நோக்கி இந்திய மக்களை இட்டுச்செல்லும் வழிகாட்டியாகவும் இது அமைந்தது.

நான்காம் ஐந்தாண்டுத் திட்டம்(1969-1974)

மக்களின் வாழ்க்கைத் தரத்தை- குறிப்பாக பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை- உயர்த்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.உற்பத்தியைப் பெருக்குவது மட்டுமின்றி ஈட்டப்பட்ட செல்வத்தை மக்கள் அனைவருக்கும் சமமாகப் பிரித்து வழங்குவதும் முதலிடத்தைப் பெற்றன.நாட்டின் செல்வமும் பொருளாதார சக்தியும் சில இடங்களில் மட்டுமே குவிந்திருக்காமல் அவற்றைப் பரவலாக்குவது தலையாய பனி ஆயிற்று.

ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டம்(1974-1979)

உலக அளவில், உணவுப் பொருட்கள், உரம் போன்ற விவசாய இடுபொருட்கள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் பெரிதும் உயர்ந்தன. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது அவசரத்தேவையாக இருந்தது.1974-75 இன் மத்தியில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பிற நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.

ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம் (1980-1985)

வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றைக் களைதல் ஆகியவை இத திட்டத்தில் முதலிடம் பெற்றன.

ஏழாம் ஐந்தாண்டுத் திட்டம் (1985-1989)

உணவு தானிய உற்பத்தி,வேலை வாய்ப்பைப் பெருக்குதல் மற்றும் மக்களின் உற்பத்தித் திறனைப் பெருக்குதல் போன்றவை முக்கியத்துவம் பெற்றன.

எட்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1992-1997)

உணவு உற்பத்தியில் இந்திய நாடு ஏறத்தாழ தன்னிறைவு அடைந்துவிட்டது. தொழில் துறை மற்றும் சேவை வழங்கும் துறைகளும் நன்கு முன்னேறி இருந்தன. ஆனால் நிதிப்பற்றாக்குறை, பொதுக்கடன் , நலிந்து வரும் அந்நியச் செலாவணி கையிருப்பு மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் ஆகியவற்றை எதிர்த்துப் போரிட வேண்டிய அவசியம் உருவாகி விட்டது. எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் கீழ்காண்பவை முன்னுரிமை பெற்றன:
  1. அதிகமான அளவில் வேலைவாய்ப்பினை உருவாக்குவதன் மூலம் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் முழு அளவு வேலைவாய்ப்பினை எட்டுதல்
  2. மக்களின் ஒத்துழைப்பின் மூலமும் ஊக்கத்திட்டங்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை விளக்கிக்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துதல்
  3. அனைவருக்கும் ஆரம்பக் கல்வி அளித்தல் மற்றூம் 15 முதல் 35 வயது வரை உள்ள மக்களிடத்து காணப்படும் எழுத்தறிவின்மையைப் போக்குதல்
  4. அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்குதல்,அடிப்படை மருத்துவ வசதிகளை அளித்தல் , நோய் தடுப்பு முறைகளை அளித்தல் மற்றும் தோட்டிப் பணிகளை அற்வே ஒழித்தல்
  5. விவசாய வளர்ச்சி, பல்வகைப் பயிர்களைப் பயிரிடல் மற்றும் ஏற்றுமதி செய்யக் கூடிய அளவுக்கு தானிய உற்பத்தியைப் பெருக்குதல்
  6. மின்னாற்றல், போக்குவரத்து, தவகவல் தொடர்பு மற்றும் பாசனம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி வளர்ச்சிப் பணிகளைத் தடையின்றி நீடிக்கச் செய்தல்.

ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்டம் (1997-2002)

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கும் இடையில் உள்ள ஒருங்கிணைந்த உறவை ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம் அங்கீகரித்தது.காலங் காலமாக நிலவி வரும் சமுதாய வேறுபாடுகளைக் களைந்து ஏழை எளிய மக்களின் நல்வாழ்வுக்கு ஆதரவு அளிக்கும் கொள்கைகளை உருவாக்குவதில் அரசு உறுதியாக உள்ளது."சமூக நீதி மற்றும் சமத்துவத்துடன் இணைந்த வளர்ச்சி " என்பதே இத்திட்டத்தின் தாரக மந்திரம்.
தேசிய வளர்ச்சிக் குழு, கீழ் காண்பவற்றை ஒன்பதாவது ஐந்தானண்டுத் தித்தின் முக்கிய நோக்கங்கள் எனக் குறிப்பிட்டது.
  1. வேலை வாய்ப்பைப் பெருக்குதல் மற்றும் வறுமையை ஒழிப்பு ஆகியவற்றுக்காக விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளித்தல்
  2. விலைவாசிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதே நேரத்தில் வளர்ச்சி வேகத்தை அதிகரித்தல்
  3. அனைவருக்கும் -குறிப்பாக-பின்தங்கிய சமூகத்தினருக்கு - உணவு மற்றும் சத்துணவை உறுதி செய்தல்
  4. அனைவர்க்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர் , அடிப்படை சுகாதார வசதிகள், அடிப்படைக் கல்வி, தங்குமிடம் ஆகியவற்றை குறித்த கால வரையறைக்குள் உறுதி செய்தல்
  5. மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துதல்
  6. அனைத்து நிலைகளிலும் உள்ள மக்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்கேற்பின் மூலம் வளர்ச்சிப் பணிகளின் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப் படாமல் காத்தல்
  7. பெண்கள் மற்றும் சமுதாயத்தில் பின் தங்கிய - அட்டவனை இன மக்கள், பிற பின் தங்கிய இனத்தவர்கள் மற்றும் சிறுபான்மை இனத்தவர் ஆகியோருக்கு அதிகாரம் வழங்குதல்
  8. பஞ்சாயத்து ராஜ், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றில் மக்களின் பங்களிப்பை அதிகரிக்க ஊக்கப்படுத்துதல்
  9. சுய சார்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துதல்.

மக்களின் வாழ்க்கைத் தரம்

வேலை வாய்ப்பு

அனைத்துப் பூகோளப் பகுதிகளும் சீராக வளர்ச்சி பெறுவதை உறுதி செய்தல்

பத்தாம் ஐந்தாண்டுத் திட்டம் (2002-2007)

பத்து விழுக்காடு வேகத்தில் உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரத்தை மாற்றுவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.முதலீட்டாளர்களுக்கு இணக்கமான சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சிக்கு சாதகமான சூழ் நிலையை உருவாக்குதல் ஆகியவை முன்னுரிமை பெற்றன.தனியார் துறையினர் , பொருளாதார வளர்ச்சியில் துடிப்புடன் பங்கேற்பதையும் நிதித்துறையில் வெளி நாட்டினர் அதிக அளவில் பங்கேற்பதையும் அரசு வரவேற்றது. வர்த்தக நிறுவனங்கள் வெளிப்படையுடன் செயல்படுவதற்கும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் அதிக ஊக்கம் அளிக்கப்பட்டது. வறுமையை ஒழித்தல்; கல்வியைப் பரப்புதல் ஆகியவை அதிக கவனம் பெற்றன 2007 ஆம் ஆண்டு வாக்கில் வனப்பரப்பை 25 விழுக்காடு அளவுக்கு உயர்த்துதல்; அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்குதல்

கண்காநிக்கத்தக்க இலக்குகள்

  1. வறுமையைக் குறைப்பது
  2. வேலைவாய்ப்பைப் பெருக்குவது
  3. 2007 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வியை எட்டச் செய்வது
  4. மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை 16.2 விழுக்காடாகக் குறைப்பது
  5. 2007 ஆம் ஆண்டுக்குள் கல்வி ஏற்றோர் எண்ணிக்கையை எழுபத்தைந்து விழுக்காடாக உயர்த்துவது
  6. குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பது
  7. பேறுகாலத்தில் பெண்கள் இறக்கும் விகிதத்தைக் குறைப்பது
  8. வனப் பரப்பை அதிகரிப்பது
  9. 2012 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழி செய்தல்
  10. மாசு பட்ட அனைத்து ஆறுகளையும் 2007 ஆம் ஆண்டுக்குள் தூய்மைப் படுத்துவது

பதினோராம் ஐந்தாண்டுத் திட்டம் (2007-2012)

  1. மொத்த உள் நாட்டு உற்பத்தியை பத்து விழுக்காடு அளவுக்கு உயர்த்துதல்
  2. எழு நூறு இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ; ஆரம்பப் பள்ளிகளில் வசதிகளை மேம்படுத்துதல்
  3. குழ்ந்தை இறப்பு விகிதத்தை 28 ஆகக் குறைத்தல்; அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்குதல், வனப் பரப்பளவை ஐந்து விழுக்காடு புள்ளி அளவுக்கு உயர்த்துதல்

பன்னிரண்டாம் ஐந்தாண்டு திட்டம் (2012-17)

பன்னிரண்டாம் ஐந்தாண்டு திட்டம் விரைவில் தொடங்க உள்ளது.இதற்கான் கொள்கை வரைவினை இறுதி செய்யும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.